தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா!.. இன்று ஒரே நாளில் 7 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 21, 2020 07:36 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tamil nadu coronavirus covid19 statistics as on may 21

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,282 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 7,588 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை 3,55,893 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.