'நுரையீரல் முழுக்க புழுக்கள்...' 'பச்சையா பாம்பு சாப்பிட்டேன் டாக்டர்...' ஸ்கேன் பண்ணி பார்த்த சீனா டாக்டர்கள் மிரண்டு போய்ட்டாங்க...'
முகப்பு > செய்திகள் > உலகம்சமைக்காத பாம்பை சாப்பிட்டதால் நுரையீரல் முழுவதும் புழுக்களை பெற்ற சீன நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவிலிருந்து தற்போது உலகெங்கும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் வீரியம் குறையாத இந்த சமயத்தில், மீண்டும் இறந்த பாம்பை சமைக்காமல் சாப்பிட்ட வாங் என்ற நபருக்கு நுரையீரல் முழுவதும் புழுக்கள் உருவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக வாங்கிற்கு அதிகப்படியான வயிற்றுவலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற வாங்கிடம் அவரது உணவு பழக்கத்தைப் பற்றி விசாரித்துள்ளனர் மருத்துவர்கள். ஆனால், அவர் கடல் உணவுகள் தான் அதிகம் சாப்பிட்டதாக கூறியுள்ளார்.
இதனால் அடுத்தகட்டமாக வாங்கின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், நுரையீரல் முழுவதும் புழுக்களாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து வாங்- கிடம் மருத்துவர்கள் விசாரித்ததில் இறுதியாக தான் ஒரு பாம்பினை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டதாக ஒப்புக்கொண்டார். இதுபோல் சமைக்காத இறைச்சிகளை உண்பதால் பாராகோனிமியாஸின் ( paragomiasis) எனும் நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் வாங்கிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சீனாவில் ஒரு குறிப்பிட்ட மக்கள் வொவ்வால், பாம்பு, எலி, எறும்பு தின்னி, முதலை போன்ற அசாதாரண உணவுகளை உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர் ஒரு சிலர், ஒருபடி மேலே போய் உயிருள்ள எலிகளை தின்னும் வீடியோ கூட வெளிவந்தது. இதனால் பல தொற்று நோய்களும் உருவாகக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். இதேபோல் வௌவால்களை சாப்பிட்டதால் தான் கொரோனா வைரஸ் பரவியது என ஒரு சில ஆய்வு முடிவுகள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பாம்பினை சாப்பிட இவருக்கு நுரையீரல் முழுவதும் புழுக்கள் உருவாகிய சம்பவம் சீன மருத்துவர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.