'அதிர்ஷ்டம் உங்கள தேடி வரும்...' 'டெலிவரி பாய் வேஷம் போட்டு இரு தலை பாம்பு விற்க வந்திருக்காங்க...' இந்த பாம்போட விலை என்ன தெரியுமா...? நூதன மோசடி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 23, 2020 07:33 PM

கர்நாடக மாநிலதில் ஊரடங்கு காலத்தில் டெலிவரி ஆட்கள் போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்ற நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

People to be delivery men and tried to sell a two-headed

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசால் வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரிவில் இரு தலை பாம்பை 50 லட்சத்திற்கு விற்க முயன்ற 2 நபர்கள் கையும் களவுமாக காவலர்களிடம் மாட்டியுள்ளனர்.

144 தடை சட்டத்தால் பெங்களூரில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுதேடிச் சென்று வழங்கும் பணியினை ‘டன்சோ’ என்னும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அதிகப்படியான டன்சோ ஊழியர்கள் இரு சக்கர வாகனங்களில் நகரம் முழவதும் சுற்றி வருகின்றனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கும்பல் ஒன்று 'டன்சோ' டெலிவரி பையன்களை போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்ற முஹமது ரிஸ்வான் மற்றும் அசார் கானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கர்நாடக மத்திய குற்றப் பிரிவு காவல்துறை இணை ஆணையர் சந்தீப் பாட்டில் தனது ட்விட்டர் பக்கத்தில், 'டன்சோ' டெலிவரி செய்பவர்கள் போல் வேடமிட்டு, விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட இரு தலை பாம்பை விற்க முயன்ற இருவரை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்’என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த இரு தலைப் பாம்புகள் 1972-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வன உயிரின பாதுகாப்புச் சட்டப் பிரிவு 4-இன் படி பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.

இரு தலை பாம்புகள் மருத்துவ குணம் கொண்டவை. மேலும் ஒரு சிலர் இதனை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் வரும் எனவும் நம்பி இம்மாதிரியான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

Tags : #SNAKE