சமையலறைக்குள் படமெடுத்து நின்ற ‘நல்லபாம்பு’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 29, 2020 09:56 AM

கோவை அருகே வீட்டின் சமையலறை பாத்திரங்களுக்கு இடையே நாகப்பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Forest department caught snake in the kitchen in Coimbatore

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் சிவா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சமைப்பதற்காக சமையல் அறைக்குள் சென்றுள்ளனர். அப்போது சமையல் பாத்திரத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் கருப்பசாமி, ஆனந்த் என்ற இரண்டு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்துள்ளனர்.

அப்போது சமையலறை பாத்திரங்களுக்கு இடையில் பாம்பு ஒன்று சுருண்டு இருந்தது தெரியவந்தது. நீண்ட போரட்டத்துக்கு பின் பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். இது விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு (நல்லபாம்பு) என வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அப்பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இதேபோல் வால்பாறை தோட்டப்பகுதி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நீண்ட நாள்களாக சுற்றி திரிந்த நாகப்பாம்பையும் வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.