உனக்கு எவ்ளோ 'தைரியம்' இருந்தா?....பாம்பை துண்டு-துண்டாக 'கடித்துக்குதறிய' இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 06, 2020 01:04 AM

கர்நாடக மாநிலம் கோலார் அருகே ஒருவர் குடி போதையில் பைக்கினை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் பயணித்த வழியில் பாம்பு ஒன்று சென்றதாக தெரிகிறது. அதைக்கண்ட அந்த நபர் கோபமடைந்துள்ளார்.

Guy shouts into snake and bite it into pieces

இதனையடுத்து பைக்கை நிறுத்தி இறங்கிய அவர், அந்த பாம்பை பிடித்து 'எப்படி என் வழியில் குறுக்கே வருவாய்?' என கூறி கொண்டு அதனை தனது பற்களால் கடித்து குதறியுள்ளார். இந்த பரபரப்பு சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானது.

மேலும், இந்த காட்சியை நேரில் கண்டவர்கள், பதட்டத்தில் கூச்சலிட்டுள்ளனர். அவரது செயலை கண்டிக்கவும் செய்துள்ளனர். அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர் பாம்பினை துண்டு துண்டாக கடித்து துப்பியுள்ளார். கர்நாடகாவில் சுமார் நாற்பது நாட்களுக்கு பின் மதுக்கடைகள் திறந்துள்ள நிலையில் முதல் நாளில் 45 கோடி ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.