மாடு படுத்திருந்தா ஒரசிட்டு போவியா?...பஸ்சுக்குள்ள புகுந்து.. டிரைவரை அடிச்சு நொறுக்குன கும்பல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 27, 2019 08:51 PM

மத்திய பிரதேச மாநிலம் சத்தாரபூர் மாவட்டம் அலிபுரா பகுதியை சேர்ந்த சாஹிர் என்பவர் அப்பகுதியில் பஸ் டிரைவராக இருக்கிறார்.இவர் கடந்த திங்கட்கிழமை இரவு பஸ் ஓட்டி  செல்லும்போது ரோட்டில் படுத்திருந்த பசுமாட்டின் கால் மீது தெரியாமல் பஸ்ஸை ஏற்றி விட்டார்.

 

A Mob stopped the bus and brutally thrashed bus driver

இதைத்தொடர்ந்து மறுநாள் அவர் பஸ் ஓட்டி செல்லும்போது சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் பஸ்ஸை வழிமறித்து,உள்ளே ஏறி சாஹிரை அடித்து, உதைத்துள்ளனர்.ஆனால் சுற்றி அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர,யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

 

தற்போது சாஹிர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #BUS #MADYAPRADESH