‘பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பள்ளிப் பேருந்து..’ கோர விபத்தில் ‘9 குழந்தைகள் பலியான சோகம்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 06, 2019 02:33 PM

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

9 children killed as school van falls into gorge in Uttarakhand

உத்தரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் மாவட்டத்திலுள்ள கங்சாலி என்ற இடத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று 18 குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மலைப்பாதையின் ஒரு திருப்பத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். இந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 8 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : #UTTARAKHAND #SCHOOL #BUS #ACCIDENT