இதுக்குப் பேருதான் 'பயணியர் குடையோ'.. ஒரு 'சாதா மழைக்கே' தாங்காத 'பேருந்துகளா?'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Aug 05, 2019 06:00 PM
மழை நாட்களில் நம்மூ பேருந்துகளில், மழை நீர் ஒழுகுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், அதற்கு மக்கள் எடுத்துள்ள மாற்று முடிவு, பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது எனலாம்.
கோவையின் அருகே உள்ள வால்பாறை பகுதிகளில் உள்ள 54 எஸ்டேட்டுகளிலிலும் வேலை செய்யும் மக்களுக்கு வால்பாறையில் இருந்து சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை பருவமழை பொழிவதால், இங்கு மக்கள் பெருமளவில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிலையில், வால்பாறையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், பேருந்தின் மேற்கூரைகளில் இருக்கும் உடைசல்கள் காரணமாக ஒழுகுவதால், பேருந்துகளுக்குள் மாணவர்களும் மக்களும் குடைகளை பிடித்துக்கொண்டு நிற்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மழைநாளில் பேருந்துகளில் இப்படி ஒழுகுவது மட்டுமன்றி, பேருந்துகளே பெரும்பாலும் பழைய பேருந்துகளாகவும், சிக்கலான கண்டிஷன்களில் இருப்பதாகவும் இங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.