‘சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கான’.. ‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. ‘டிக்கெட் முன்பதிவு தொடக்கம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 26, 2019 05:01 PM

தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 25ஆம் தேதி அரசு பேருந்துகளில் சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 

Chennai Bookings for Deepavali special buses begins tomorrow

சென்னையிலிருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் 1200 பேருந்துகளில் நாள்தோறும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த பேருந்துகளில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்குகிறது. பொதுமக்கள் www.tnstc.in மற்றும் 2  தனியார் இணையதளங்கள் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகையின்போது எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது குறித்து அடுத்த 2 வாரங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் எனவும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : #CHENNAI #TNSTC #DEEPAVALI #SPECIAL #BUS #TICKET #RESERVATION