‘இனி பெண்களுக்கு இலவசம்’.. ‘முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பால்’.. ‘டெல்லி மக்கள் மகிழ்ச்சி..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 15, 2019 07:43 PM

டெல்லியில் சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இனி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Free Travel For Women On Delhi Buses Arvind Kejriwal

சுதந்திர தின விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதல் டெல்லி அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்துள்ளார். ரக்‌ஷாபந்தன் தினத்தை முன்னிட்டு சகோதரிகளுக்கு தரும் பரிசு இது எனவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பெண்கள் பாதுகாப்பு கருதி டெல்லி மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இது வெற்று அறிவிப்பு என பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவரை விமர்சனம் செய்துவந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags : #DELHI #ARVINDKEJRIWAL #GOVERNMENT #BUS #FREE #WOMAN