‘சுங்கச் சாவடி கேபினுக்குள் நுழைந்து’... ‘ஊழியரை சரமாரியாக தாக்கிய இருவர்’... 'அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 09, 2019 11:17 AM

சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில்,  ஊழியர் ஒருவரை, இருவர் சேர்ந்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Toll plaza staff thrashed by 2 men over tariff in MP

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே, மஹாகாலேஷ்வர் என்றப் பகுதியில் சுங்கச் சாவடி ஒன்று உள்ளது. இங்கே கடந்த சனிக்கிழமையன்று, கட்டணம் செலுத்துவது மற்றும் வாகனம் ஒன்று செல்வது தொடர்பாக வாகனத்தில் வந்தவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாகனத்தில் இருந்த இருவர், கீழே இறங்கி வந்து, சுங்கச் சாவடி கேபினுக்குள் இருந்த ஊழியரை கடுமையாகத் தாக்கினர்.

இந்தச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுங்கச் சாவடி ஊழியர்களைத் தாக்கியது, சேகர் சிங் பவார் மற்றும் நரேந்திர சிங் பவார் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் பாஜக நிர்வாகிகள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவ்விருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MADYAPRADESH #CCTVFOOTAGE