‘மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து’.. ‘டிரைவர் எடுத்து துரித முடிவு’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 07, 2019 08:54 AM

மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரின் மீது மோதி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Private Bus accident in Erode

மைசூரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று ஈரோடு மாவட்டத்தை நோக்கி சென்றுள்ளது. அப்போது திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் மலைப்பாதையில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி பேருந்து கீழே விழச் சென்றுள்ளது.

அப்போது ஓட்டுநர் வேகமாக பேருந்தில் இருந்து இறங்கி பேருந்து நகராமல் இருக்க சக்கரங்களின் முன்பு கல்லை வைத்துள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : #ACCIDENT #BUS #ERODE