‘சாலையைக் கடக்கும் போது நடந்த விபரீதம்’.. பைக் மீது மோதிய தனியார் பேருந்து.. 2 பேர் பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 06, 2019 10:48 PM

இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bus hit Two wheeler and caused accident in Theni

திண்டிக்கல்-குமிளி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது சாலையின் எதிர் திசையில் சிவனாண்டி என்பவர் தனது மனைவி ரேணுகாவுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்துள்ளார். கோசேந்திர பகுதியின் அருகே சென்றுகொண்டிருந்தபோது சிவனாண்டி பைக்கிற்க்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சிவனாண்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியுள்ளது. இதில் பேருந்தில் பயணித்த டிக்கெட் பரிசோதகர் விஜயன் என்பவரும், சிவனாண்டியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ரேணுகாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Tags : #CCTV #BUS #TWOWHEELER #ACCIDENT