"யோகா செய்தால் கொரோனா தாக்காது!" -'யோகி ஆதித்யநாத்'... "இது தெரியாம ஒரு மூவாயிரம் பேர் செத்துட்டாங்களே..." "சீன அதிபர் கண்ணில் படும் வரை இந்த செய்தியை பரப்பவும்..."

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 02, 2020 05:28 PM

யோகா பயிற்சி மேற்கொண்டால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Yogi Adityanath suggests Yoga to fight coronavirus

உலகம் முழுவதும் 60 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நோய்க்கு இதுவரை மருந்து தயாரிக்கப்படவில்லை. எய்ட்ஸ் நோய்க்கு வழங்கப்படும் மருந்துகளே கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அறிவியில் அறிஞர்கள் பலரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார். உலகமே மன அமைதிக்காவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், யோகா செய்வதன் மூலம் அவற்றை எளிதில் பெறமுடியும் எனத் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக யோகா செய்து வருவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு போன்ற நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு கூட யோகா செய்வதன் மூலம் வராது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags : #YOGI ADITHYANATH #UTTARPRADESH #CORONA #YOGA