'இந்த தடவ மிஸ்ஸே ஆகாது' ... 'சச்சினின்' இமாலய சாதனையை ... முறியடிக்க காத்திருக்கும் 'விராட் கோலி' !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 12, 2020 12:34 PM

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சச்சினின் இமாலய சாதனை ஒன்றை விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவரின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Kohli awaits to break Sachin Tendulkar biggest record

தென்னாபிரிக்க அணி இந்தியா மண்ணில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டி தொடரில் ஆடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் 12,000 ரன்களை எட்ட இன்னும் 133 ரன்கள் தேவை. மூன்று போட்டிகள் உள்ளதால் விராட் கோலி இந்த சாதனையை எட்ட அதிக வாய்ப்புள்ளது. மேலும், குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 12,000 ரன்களை தொட்ட சச்சினின் சாதனையும் முறியடிக்கக் கூடும்.

சச்சின் டெண்டுல்கர் 300 போட்டிகளிலும், அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா அணி வீரர் 314 போட்டிகளிலும் 12,000 ரன்களை கடந்தனர். 239 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள விராட் கோலி, நியூசிலாந்து தொடரிலேயே இந்த சாதனையை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான அந்த தொடரில் முறையே 51, 15 மற்றும் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #VIRAT KOHLI #SACHIN TENDULKAR #IND VS SA