'வெறிப்பிடித்து' தாக்கிக் கொண்ட 'கல்லூரி மாணவர்கள்'... 'அலறித்துடித்து' ஓடிய 'மாணவிகள்'... சென்னை அருகே பதற்றம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 04, 2020 09:36 PM

செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்கள் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tension as students attacked each other with weapons

செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்குளத்தூரில் அமைந்துள்ள தனியார் கல்லூரிக்கு எதிரில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளுக்கு அருகில், கூடியிருந்த மாணவர்களில் சிலர் திடீரென ஆவேசம் வந்தது போல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சர்வசாதரணமாக கத்தியை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

இதனைப் பார்த்த மற்ற மாணவ-மாணவிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மாணவர்கள் மட்டும் தானா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #CHENGALPATTU #COLLEGE STUDENTS #ATTACKED EACH OTHER #KATTANKULATHUR