'என் புள்ள எப்படி கதறி இருப்பான்'... 'காருக்குள் ஜாலியா கேம்'... 'திடீரென லாக் ஆன டோர்'... நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாருக்குள் அமர்ந்து கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்,மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொரதாபாத்தில் உள்ள முந்தா பாண்டே பகுதியில் 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது 4 முதல் 7 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் காருக்குள் அமர்ந்து கேம் விளையட தொடங்கியுள்ளார்கள். அந்த நேரம் காரின் கதவு திடீரென மூடி கொண்ட நிலையில், அது தானாக லாக் ஆனதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடந்த விபரீதம் குறித்து அறியாமல் அவர்கள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்கள்.
இந்த நிலையில் நேரம் செல்ல செல்ல அருகில் யாரும் இல்லாத நிலையில் காருக்குள் சிக்கியவர்கள் மூச்சித்திணறி மயங்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து சிறுவர்கள் மயங்கிக் கிடப்பதைப் பார்த்த ஒருவர், மயக்க நிலையிலிருந்த சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதில் இரண்டு பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள். இறந்த சிறுவர்களின் பெற்றோர், அவர்களது சடலங்களைப் பார்த்துக் கதறி அழுதார்கள். வீட்டில் குழந்தைகள், சிறுவர்கள் இருந்தால் அவர்கள் மீது நிச்சயம் கவனம் இருக்க வேண்டும் என காவல்துறையினர் கூறியுள்ளார்கள். காருக்குள் சிக்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
