ஒட்டுமொத்த இந்தியாவிலும்... 'இந்த' 69 மாவட்டங்களில் தான்... கொரோனா 'இறப்பு' விகிதம் அதிகமாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது 3 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் விரைவான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்கள் மற்றும் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் உள்ள மாவட்டங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. எந்தெந்த மாவட்டங்கள் என்பதை கீழே பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள்:-
மஹாராஷ்டிரா
மும்பை, தானே, பால்கர், அவுரங்காபாத், ராய்கோட், புனே, சோலாப்பூர், நாசிக், அகோலா, ஒஸ்மானாபாத், கோண்டியா மற்றும் ஜல்கான்.
டெல்லி
வடமேற்கு டெல்லி, மத்திய டெல்லி, தென்கிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, டெல்லி வடக்கு, ஷஹ்தாரா, டெல்லி தென்மேற்கு மற்றும் டெல்லி வடகிழக்கு.
தெலுங்கானா
மல்கஜ்கிரி, ஐதராபாத், ரங்காரெட்டி, மற்றும் சூர்யாபேட்டை.
தமிழ்நாடு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர்.
பீஹார்
ககாரியா, பூர்பி சாம்பிரன், சீதாமாரி, முசாபர்பூர்; கார்கோன், புர்ஹான்பூர்.
மத்திய பிரதேசம்
நீமுச், பிரோசாபாத்
இதேபோல உத்தரபிரதேசத்தில் சித்ரகூட், அசாமில் ஹோஜாய் மற்றும் திமா ஹசாவ், குஜராத்தில் அகமதாபாத் மற்றும் வதோதரா, திரிபுராவில் செபாஹிஜாலா, உத்தரகண்ட் மாநிலத்தில் தெஹ்ரி கர்வால் மற்றும் ஹவுராட், மேற்கு வங்காளத்தில் ஹவுரா மற்றும் ராஜஸ்தானில் உள்ள பாலி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்புஉறுதிப்படுத்தல் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
கொரோனா இறப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள்:-
மத்திய பிரதேசம்: மண்டி, செகோர், உமரியா, மான்சூர், ராஜ்கர், சட்னா, உஜ்ஜைன், கோஷங்காபாத், புர்கான், கார்கோன், சாகர், தேவாஸ், கிழக்கு நிமர் (கண்ட்வா), ஷாஜாபூர், ரத்லம் சிந்த்வாரா, தத்யா, ராஜ்கர், வாதிகாம்கர்,ஆக்ரா மால்வா,ஜாபுவா,
உத்தர பிரதேசம்: லலித்பூர், ஜான்சி, மீரட், ஆக்ரா, அலிகார், கோரக்பூர், பிரோசாபாத், மதுரா, எட்டா, ஜலாவுன், மகோபா
மஹாராஷ்டிரா: வாஷிம், நந்தூர்பார், ஜல்கான், துலே, சோலாப்பூர், அவுரங்காபாத், நாசிக், சதாரா, அமராவதி, வர்தா
குஜராத்: போர்பந்தர், பஞ்ச் மஹால், ஆனந்த், அகமதாபாத், பாவ்நகர், பாட்னா, ராஜேந்திர நகர், கட்ச், பருச்
ராஜஸ்தான்: கரவுலி, சவாய் மாதோபூர், பிரதாப்கர், ஜெய்ப்பூர், பரண்
தெலுங்கானா: நாராயண்பூர், மஞ்சேரியல், நிர்மல்
இமாச்சல பிரதேசம்: மண்டி, சிம்லா
மேற்கு வங்காளம்: கொல்கத்தா, 24 பர்கானாஸ் வடக்கு
டெல்லி: ஷாஹ்தாரா, வடகிழக்கு டெல்லி
ஹரியானா: ஜிந்த்
கர்நாடகா: தும்குரு
பஞ்சாப்: கபுர்தலா
சத்தீஸ்கர்: பஸ்தர்
மொத்த இறப்புகளில் 82 சதவீதம் மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.