'கொரோனா இருக்கு ஆனா இல்ல...' 'வரும் ஆனா வராது...' 'ஏதோ ஒண்ணு...' '35 பேருக்கு' 'கதறக்கதற' ட்ரீட்மென்ட்... '3 நாள்' கழித்து காத்திருந்த 'ட்விஸ்ட்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரபிரதேசத்தில் தனியார் ஆய்வகத்தின் தவறால், கொரோனா தொற்று இல்லாத 35 பேருக்கு, 3 நாட்கள் கொரோனா சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 35 பேருக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல், சளி இருந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன. இதையடுத்து அரசின் தனிமைப்படுத்தல் மையத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3 நாட்கள் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து மீண்டும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, சோதனை மாதிரிகள் தேசிய வைரலாஜி இன்ஸ்டியூட்டிற்கு அனுப்பப்பட்டது. அப்போது அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லையென முடிவுகள் வந்துள்ளது. இதனையடுத்து அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ஆனால் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதனையடுத்து நொய்டாவை சேர்ந்த அதிகாரிகள், அனைத்து தனியார் ஆய்வகங்களும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஒரு ஆய்வகத்தின் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.