‘தாறுமாறாக’ காரை ஓட்டி ஸ்வீட் கடைக்குள் விட்ட சிறுவன்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பூந்தமல்லி அருகே சிறுவன் ஓட்டிய கார் கடைக்குள் புகுந்ததில் ஒருவருக்கு இரண்டு கால்களும் முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டை பகுதியில் இனிப்பு கடை நடத்தி வருபவர் பெரியசாமி. இவரது கடைக்கு அருகில் உள்ள குளிர்பான கடையில் வேலை பார்க்கும் சிறுவன், கடைக்கு சொந்தமான காரை எடுத்து ஓட்டி வந்துள்ளான். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் இனிப்பு கடைக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை இடித்துக் கொண்டு கடைக்குள் புகுந்துள்ளது.
இதில் கடைக்குள் இருந்த பெரியசாமியின் இரு கால்களிலும் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பெரியசாமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
