VIDEO: ஊழியர்களை 'தாக்கி'... கொரோனா நோயாளிகளின் 'ரத்த' மாதிரிகளை... திருடிக்கொண்டு 'ஓடிய' குரங்கு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊழியர்களை தாக்கி கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகளை, குரங்கு தூக்கிக்கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா முழுவதும் கொரோனா எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து குரங்கு ஒன்று கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆப்ரேஷன் கிளவுஸ்கள் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ஓடியிருக்கிறது.
👉A monkey in UP's Meerut ran away with swab samples taken for coronavirus test
👉In this video, the monkey can be seen munching on them as well
👉DM has said he would look into it. Locals say it's a regular menace
👉Tagging @IvankaTrump since she loves such videos from India pic.twitter.com/USjhuucDXf
— Saahil Murli Menghani (@saahilmenghani) May 29, 2020
கொரோனா நோயாளிகளின் ரத்த பரிசோதனை மாதிரிகள், ஆபரேஷன் கிளவுஸ்கள் ஆகியவற்றை மருத்துவமனை ஊழியர்களை தாக்கி, குரங்கு தூக்கிக்கொண்டு ஓடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் எஸ்.கே.கார்க் கூறுகையில், ''குரங்கு திருடிச் சென்றது கொரோனா டெஸ்ட் மாதிரிகள் அல்ல. ஆனால், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரிசோதனைக்காக ரத்தம் சேகரிப்பது வழக்கமான நடைமுறைதான். குரங்கு திருடிச்சென்றது புதிதாக எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள்.
கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குளிர்ந்த பாக்சில் வைத்து கொண்டு செல்லப்படும். அது திறந்த வெளியில் வைக்கப்படாது. குரங்கில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவும் என அறிவியல்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தால் கொரோனா வைரைஸ் பரவ வாய்ப்பு இருக்குமோ என அருகில் உள்ளவர்கள் அச்சப்படத்தேவையில்லை,'' என தெரிவித்து உள்ளார்.