ஊரடங்கை அமல்படுத்தியதில் நாட்டிலேயே 'சிறந்த' மற்றும்... 'மோசமான' மாநிலங்கள் இதுதான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கை முழுமையாக அமல்படுத்தியதில் சிறந்த மாநிலம் எது? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் முதல் 4 கட்டங்களாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தற்போது நாம் 5-வது ஊரடங்கில் இருக்கிறோம். இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடித்து இந்தியா முழுவதும் ஊரடங்கை முழுமையாக முழுமையாக அமல்படுத்திய மாநிலம் என்ற பெருமை சண்டிகருக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்த சமீபத்திய ஆய்வில் டெல்லி, சண்டிகர் மாநிலங்கள் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தி இருக்கின்றன. டெல்லி, மராட்டியம், பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் ஊரடங்கு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கேரளா, திரிபுரா, இமாச்சல பிரதேசம், ஆந்திரா, அசாம், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமாரான அளவுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
அதே நேரம் ஊரடங்கை கண்டுகொள்ளாத மாநிலங்களில் பீகார் மிக மிக மோசமாக இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
