“30 நிமிஷத்துக்கு மேல நின்னு, நொந்து போறாங்க.. ப்ளீஸ் இந்த 5 டோல்கேட்டையும்..” - தமிழச்சி தங்கபாண்டியன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் 5 சுங்கச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று, தென் சென்னை தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

ஒரு நாளைக்கு 1 லட்சத்துக்கும் மேலான வாகனங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தும் இந்த சாலையில் அடுத்தடுத்து தொடர்ந்து 5 சுங்கச் சாவடிகள் இருப்பதால், வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளாவதோடு, வாகன ஓட்டிகளும் 30 நிமிடத்துக்கு மேலாக இந்த சுங்கச்சாவடிகளில் காத்திருந்து கடும் சிரமத்துக்கு ஆளாவதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட
தென்சென்னைத் தொகுதிக்குட்பட்ட சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றைத் தெரிவித்து, அச்சுங்கச்சாவடிகளை நீக்க வலியுறுத்தி மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.@nitin_gadkari அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினேன். pic.twitter.com/h13cmzqfRk
— தமிழச்சி (@ThamizhachiTh) February 11, 2020
ராஜீவ் காந்தி சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் ஓ.எம்.ஆர்., பெருங்குடி ஓ.எம்.ஆர், ஐடெல், ஈ.சி.ஆர் மற்றும் உத்தண்டி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றி உத்தரவிடுமாறு மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதியாக, கோருவதாக அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
