‘ஏன் இவ்ளோ வெறி’.. வைரலாகும் ரன் அவுட் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 11, 2019 12:02 AM

இஷான் கிஸானை ரன் அவுட் செய்த சாம் குர்ரனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Sam Curran\'s terrific run out video goes viral

ஐபிஎல் டி20 லீக்கின் 24 -வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக ரோகித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் இந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பொல்லார்ட் கேப்டனாக இருந்து மும்பை அணியை வழி நடத்தினார்.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் கிறிஸ் கெய்ல் 63 ரன்களும், கே.எல்.ராகுல் 100 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஸானை ரன் அவுட்டாக்கிய சாம் குர்ரனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #MIVSKXIP #VIRALVIDEO #RUNOUT