மீண்டும் களத்தில் பொன். மாணிக்கவேல்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 12, 2019 01:21 PM
சிலைக் கடத்தல் வழக்கில், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன். மாணிக்கவேலை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஓய்வு பெற்ற அதிகாரியான பொன். மாணிக்கவேலை, சிறப்பு அதிகாரியாக நியமித்து சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதில் பொன். மாணிக்கவேல் விளம்பர நோக்கில் நடந்துகொள்கிறார் என்றும், முறையாக வழக்குகளை விசாரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர்.
அதில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சிலைக் கடத்தல் வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய பொன். மாணிக்கவேலுக்கு அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சிலைக் கடத்தல் வழக்கை, சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவையும், அரசாணையையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக தொடர எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.