‘கூட்ட நெரிசலில் படுகாயமடைந்த புகைப்படக் கலைஞர்’.. களத்தில் இறங்கிய ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 04, 2019 05:44 PM

கேரளாவில் நடந்த ராகுல் காந்தியின் பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த புகைப்படக் கலைஞருக்கு உடனடியாக ராகுல் காந்தி உதவி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

WATCH: Rahul Gandhi helps injured journalists at Wayanad

இந்தியா முழுவதும் வரயிருக்கும் மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய இன்று ஹெலிகாப்டர் மூலம் கல்பெட்டா பகுதிக்கு வந்தார்.

அங்கு அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி பேரணியாக சென்றார். அபோது வாகன நிறுத்தப் பகுதியில் உள்ள தடுப்புகள் சரிந்து விழுந்ததில் மூன்று புகைப்படக் கலைஞர்கள் காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை அறிந்த ராகுல் காந்தி உடனடியாக அப்பகுதிக்கு சென்று, காயம்பட்ட புகைப்படக் கலைஞரை ஸ்டெச்சரில் ஏற்றி ஆம்புலன்ஸில் ஏற்றும் வரை உடனிருந்து உதவி செய்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாக வைரலானதோடு ராகுல் காந்தியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #RAHULGANDHI #VIRALVIDEO