‘கண்ணாலயே அட்வைஸ்’.. ‘அடுத்த பந்தில் விக்கெட்’.. வைரலாகும் ‘தல’தோனியின் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 09, 2019 09:16 PM

தீபக் சஹருக்கு கண்ணாலயே அறிவுரை கொடுத்து சுனில் நரேனை அவுட் செய்த தோனியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Dhoni single Chahar through eyes to make a fielding adjust

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று(09.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இந்த இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் செய்ய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். இதில் முதல் ஓவரிலேயே கிறிஸ் லின் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து சுனில் நரேனும் ஹர்பஜன் வீசிய ஓவரில் தீபக் சஹரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது தோனி கண்ணாலாயே தீபக் சஹரிடம் அறிவுரை கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #IPL2019 #IPL #CSKVKKR #WHISTLEPODUARMY #YELLOVEANBUDEN #MSDHONI #VIRALVIDEO