‘இவ்ளோ கஷ்டப்பட்டு இப்டி ஆகிடுச்சே’.. ‘அவுட்டுதான்.. ஆனா அவுட் இல்ல’.. வைரலாகும் ‘தல’யின் ஸ்டெம்பிங் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 06, 2019 08:44 PM

தோனி தனது வழக்கமான ஸ்டைலில் பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுலை ஸ்டெம்பிங் செய்தும் விதிகளின் படி நாட் அவுட் கொடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Dhoni try to run out Rahul but bails did not come off

ஐபிஎல் டி20 லீக்கின் 18 -வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(06.04.2019) நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் டு பிளஸிஸ் களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் வாட்சன் 26 ரன்களும், டு பிளஸிஸ் 54 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனை அடுத்து கடைசியாக இறங்கிய தோனி 4 பவுண்ட்ரிகள், 1 சிக்ஸர் அடித்து 37 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார் .  20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை சென்னை அணி எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் மற்றும் மய்நங் அகர்வால் இருவரும் ஹர்பஜன் சிங் வீசிய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் சர்ப்ராஸ் கான் கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது.  இதில் கே.எல்.ராகுல் 55 ரன்களும், சர்ப்ராஸ்  கான் 67 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 138 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் வழக்கம் போல தோனி பின்னே திரும்பி ஸ்டெம்பிங் செய்யும் அவரது ஸ்டைலில் கே.எல்.ராகுலை அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் பந்து ஸ்டெம்பில் பட்டு பெய்ல்ஸ்(Bails) கீழே விழாததால் விதிகளின் படி அவுட் இல்லை என அம்பயர் தெரிவித்துவிட்டார். இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் தோனிக்கும் இது போல் நடந்து நாட் அவுட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #IPL2019 #IPL #CSKVSKXIP #MSDHONI #WHISTLEPODU #YELLOVEAGAIN #VIRALVIDEO