சிக்ஸா?.. அதெல்லாம் ஜடேஜா கிட்ட நடக்குமா?.. மிரண்டு போன ரசல்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 09, 2019 11:59 PM

ரசல் அடித்த சிக்ஸரை ஒரு கையால் தடுத்த ஜடேஜாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Jadeja saves a sureshot six hit by Andre Russell

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று(09.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இந்த இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் செய்ய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து வீரர்களும் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரஸல் மட்டும் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை அடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. 17.2 ஓவர்களின் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் கொல்கத்தா வீரர் ரசல் அடித்த பந்து சிக்ஸர் செல்லவிடாமல் பவுண்ட்ரி லைனில் ஒரு கையால் தடுத்த ஜடேஜாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #CSKVSKKR #YELLOVE 🦁💛 #WHISTLEPODU #VIRALVIDEO #JADEJA