‘தல’தோனியா? ஜூனியர் பராசக்தியா?.. வைரலாகும் ‘தல’யின் க்யூட் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 06, 2019 11:14 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் குழந்தைகளுடன் தோனி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Dhoni played with CSK players sons goes viral

ஐபிஎல் டி20 லீக்கின் 18 -வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(06.04.2019) நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் டு பிளஸிஸ் களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் வாட்சன் 26 ரன்களும், டு பிளஸிஸ் 54 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனை அடுத்து கடைசியாக இறங்கிய தோனி 4 பவுண்ட்ரிகள், 1 சிக்ஸர் அடித்து 37 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார் .  20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை சென்னை அணி எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதில் அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 67 ரன்களும், கே.எல்.ராகுல் 55 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனை அடுத்து போட்டி முடிந்த பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான வாட்சன் மற்றும் தாஹிர் இருவரின் குழந்தைகளுடன் தோனி ஜாலியாக ஓடிப்பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #CSK #MSDHONI #JUSTTHALATHINGS #WHISTLEPODU #YELLOVE 🦁💛 #VIRALVIDEO