ஒரு கேட்ச் பிடிக்கவே இப்டியா!.. ‘ஷாக் ஆன ரெய்னா’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 10, 2019 01:11 AM

கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

WATCH: Piyush Chawla take rolling catch of Suresh Raina

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி நேற்று(09.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனைத் தொடர்ந்து வீரர்களும் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரஸல் மட்டும் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை அடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. 17.2 ஓவர்களின் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டு பிளிஸிஸ் 43 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் ரெய்னா 14 ரன்கள் எடுத்திருந்த போது சுனில் நரேன் வீசிய பந்தில் பியூஸ் சாவ்ளாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். விடியோவை காண இங்கே சொடுக்கவும்: https://www.iplt20.com/video/166468/piyush-chawla-s-rolling-catch

Tags : #IPL #IPL2019 #CSKVSKKR #YELLOVE #WHISTLEPODU #VIRALVIDEO