'நல்லத்தான் இருக்கு.. எதுக்குப்பா அப்படி பாக்குறீங்க?'.. ஐஐடி வளாகத்தில் 'தரமான சம்பவம்'.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Jul 29, 2019 07:30 PM
மும்பை ஐஐடி வளாகத்தில் உள்ள வகுப்பறை ஒன்றுக்குள் புகுந்த பசு மாட்டினைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்து, பின்னர் மாட்டினை விரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சனிக்கிழமை, மும்பை ஐஐடி வளாகத்திற்கு வெளியில் மழை பெய்தமையால், மாடு வகுப்பறைக்குள் தஞ்சம் புகுந்ததாக, இந்த வீடியோவை எடுத்து ஷேர் செய்த மாணவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுபற்றி ஐஐடி நிர்வாகத்திடம் செய்தி ஊடகங்கள் கேட்டதற்கு, உண்மையில் இந்த வீடியோவில் வருவது மும்பை ஐஐடிதானா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும், இதுகுறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஒரு வாரத்துக்கு முன்பு ஐஐடி வளாகத்துக்குள் நுழைந்து சுற்றிய காளை மாடு ஒன்று மாணவர் ஒருவரை முட்டியதால், பெரும் பரபரப்பு உண்டாகியது. சமீபத்தில் கேரளாவில் கூட, இளைஞர்கள் கால்பந்து விளையாண்டுக்கொண்டிருந்த போது, உள்ளே புகுந்த மாடு தானும் விளையாடப் போவதாக அடம் பிடித்து, கால்பந்தை பிடுங்கி வைத்துக்கொண்ட சம்பவம் வீடியோவாக பரவி ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெஇஇஇ தேர்வு கூட எழுதாமல், உள்ளே சென்ற மாட்டிற்கு பலரும் வாழ்த்து சொல்வது போல் கலாய்த்தபடி மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
Cow enters in IIT Bombay classroom without clearing JEE Advance 😂 😂 #IIT #IITBombay #JEEadvance pic.twitter.com/nNagWUgnZr
— RV (@Dominus_rv18) July 28, 2019
