‘நீ ஏன் இத செய்யறனு எனக்கு தெரியும்’... ‘வீடியோ எடுத்த மனைவியை’... ‘ட்ரோல் செய்த தல தோனி’... 'சாக்‌ஷி கொடுத்த சூப்பர் பதில்’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Feb 01, 2020 12:11 AM

சில நாட்களுக்கு முன்னர் தோனியின் மனைவி சாக்ஷி, தோனியை கொஞ்சி எடுத்த வீடியோ வைரலானது.  இந்நிலையில், அந்த வீடியோ எதற்காக எடுக்கப்பட்டது என தனது மனைவியை தோனி ட்ரோல் செய்துள்ளார்.

Husband Thala Dhoni Hilariously Trolls his Wife Sakshi

உலகக் கோப்பைக்குப் பின்னர் தோனி விளையாடவில்லை என்றாலும் அவர் செய்யும் விஷயங்கள் அவ்வப்போது வைரலாகி வரும். தோனியின் செயல்களை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதில் தோனியின் மனைவி எப்போதும் சுறுப்பாக காணப்படுவார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு ஹோட்டல் ஒன்றில் தோனியை வீடியோ எடுக்கும் அவரது மனைவி சாக்ஷி, கொஞ்சியபடியே ஒரு வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில், இந்த வீடியோவை சாக்ஷி எதற்காக எடுத்தார் என, மீண்டும் சாக்ஷி எடுக்கும் வீடியோவில் தோனி கிண்டலாக கூறியுள்ளார்.

அதில், ‘இன்ஸ்டாகிராம் ஃபாலேயர்களை  அதிகம் பெற நீ இதைச் செய்கிறாய்’ என்று தோனி சாக்ஷியை ட்ரோல் செய்கிறார். தோனி இவ்வாறு கூறியதும் அறையில் இருந்த அனைவரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள். அப்போது சாக்ஷி ‘உங்கள் ரசிகர்கள் என்னையும் நேசிக்கிறார்கள். ஏனெனில் நானும் உங்களில் ஒரு பாதி தானே’ என்று கூறுகிறார். மேலும் ‘உங்கள் ரசிகர்கள் எப்போதும் உங்களை பார்க்க விரும்புகிறார்கள். எங்கே மஹி பாய், தோனி தல... தல... என்று கேட்கிறார்கள்’ என்று அந்த வீடியோவில் சாக்ஷி கூறுகிறார்.

 

Tags : #MSDHONI #CSK #SAKSHI SINGH DHONI #INSTAGRAM