‘விற்பனை சரியா நடக்கல’.. மறுபடியும் வேலையில்லா நாட்களை அறிவித்த பிரபல நிறுவனம்..!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்

By Selvakumar | Oct 25, 2019 09:58 PM

சென்னை மற்றும் ஓசூரில் இயங்கும் சுந்தரம்-க்ளோடான் (Sundaram-Clayton) நிறுவனம் மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.

TVS Sundaram Clayton declares non working days at TN plants

டிவிஎஸ் (TVS) குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் சென்னை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில் டிவிஸ் குழுமத்தில் ஒன்றான வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் சுந்தரம் க்ளோடான் லிமிடெட் நிறுவனம், சந்தையில் ஏற்பட்ட சுணக்கம காரணமாக வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் இன்று (25.10.2019) வெளியிட்ட அறிவிப்பில் வியாபாரத்தில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக சென்னையில் உள்ள அதன் தொழிற்சாலையில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 2ம் தேதி வரை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. மேலும் ஓசுரில் உள்ள மற்றொரு தொழிற்சாலைக்கு அக்டோபர் 29 முதல் 31ம் தேதி வரை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக வேலையில்லா நாட்களை தொடர்ந்து அறிவித்து வருவதால் தொழிலாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்துள்ளது.

Tags : #TVS #SUNDARAMCLAYTON #NONWORKING #TAMILNADU