'பும்ரா' மும்பையை விட்டு.. 'பெங்களூர்' டீமுக்கு போயிட்டாரு போல.. உண்மையா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 25, 2019 09:08 PM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் புது ஆடைகள் உடுத்தி நிற்கும் புகைப்படம் ஒன்றை, அந்த அணி வெளியிட்டு இருந்தது. அனைத்து வீரர்களும் இருக்கும் அந்த புகைப்படத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரிட் பும்ரா மட்டும் மிஸ் ஆகி இருந்தார்.

Mumbai Indians respond to fan’s enquiry regarding Bumrah

இதனை கவனித்த ரசிகர் ஒருவர் பும்ரா எங்கே? ஒருவேளை அவர் பெங்களூர் அணிக்கு சென்று விட்டார் என நான் நினைக்கிறேன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதைப்பார்த்த மும்பை அணி ரோஹித் சர்மா அமைதியாக இருங்கள் என்று சொல்வது போன்ற ஜிப்(GIF) ஒன்றை வெளியிட்டு அவருக்கு பதில் அளித்துள்ளது.

தற்போது பும்ரா சிகிச்சைக்காக யுகேவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.