‘3 நாட்களுக்கு மழை தொடரும்’.. ‘7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 18, 2019 07:47 PM

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Heavy Rain alert in Seven Districts IMD Chennai TamilNadu

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய புவியரசன், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், தேனி, தருமபுரி, சேலம், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. மேலும் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #HEAVYRAIN #ALERT #RAIN #WARNING #IMD #CHENNAI #DISTRICTS #LIST #TAMILNADU