டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் அதிரடி மாற்றங்கள்..! வெளியான புதிய அறிவிப்பு..! விவரம் உள்ளே..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Oct 21, 2019 11:40 PM
குரூப்-2 சில மாற்றங்களை செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணம் (TNPSC) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சார்பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், இளைநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக குரூப்-2 (Group-2) தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் குரூப்-2 முதல் நிலை தேர்வில் ஒரே தாள்களாக இருந்த தேர்வு, தற்போது இரு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தாளில் 100-க்கு 25 மதிப்பெண்கள் பெற்றால்தான் இரண்டாவது தாள் திருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல் நிலை தேர்வில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கேள்விகள் கேட்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டவாது தாளில் எடுக்கப்படும் மதிப்பெண்களே பணி நியமனத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. இதனை வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே முதல்நிலை தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்வாணயம் விளக்கம் அளித்துள்ளது.
