‘ஆவின் பால் டேங்கர் லாரிகள்’... ‘நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்’... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 15, 2019 07:33 PM

தமிழகம் முழுவதும் ஆவின் நிர்வாகத்திற்கு பால் ஏற்றிச்செல்லும், டேங்கர் லாரி உரிமையாளர்கள், நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

aavin milk tanker lorry owners strike from midnight in tn

தங்களுக்கு தர வேண்டிய வாடகை பாக்கி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. நாமக்கல், சேலம், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 55 டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான, 275 பால் டேங்கர் லாரிகள் ஆவின் நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன.

இந்த டேங்கர் லாரிகளின் உரிமையாளர்களுக்கான வாடகை ஒப்பந்தம் இருமுறை முடிவடைந்தப் பின்னரும், பழைய வாடகைக்கே, பால் டேங்கர் லாரிகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவு முதல், சென்னை உள்பட தமிழகம் முழுவதும், சுமார் 30  லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும் நிலையில், தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் போராட்டம் காரணமாக தட்டுப்பாடு ஏற்படாத வகையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : #TAMILNADU #AAVIN #MILK