'தீபாவளிக்கு பஸ்ல ஊருக்கு போறீங்களா'.. சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Oct 22, 2019 09:41 AM
தீபாவளிப் பண்டிக்கைகாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்கு வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன் முன்பதிவு வரும் 24 -ம் தேதி தொடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 5 இடங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 24 -ம் தேதி முதல் 26 -ம் தேதி வரை 10,940 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மற்ற ஊர்களுக்கு இடையே 8,310 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 4,627 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களுக்கு இடையே 6,921 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com உள்ளிட்ட தளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.