‘விறுவிறுப்பாக நடந்து முடிந்தது’.. ‘3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 21, 2019 07:58 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

TamilNadu Polling Ends in Nanguneri Vikravandi by election

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.  நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 66.10% வாக்குகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில்  84.36% வாக்குகளும், காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில்  69.44% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

3 தொகுதிகளிலும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விக்கிரவாண்டியில் 81.25% வாக்குகளும், நாங்குநேரியில் 71.91%  வாக்குகளும் பதிவானது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #ELECTIONDAY #BYELECTION #NANGUNERI #VIKRAVANDI #TAMILNADU #PUDUCHERRY #KAMARAJNAGAR #SATYAPRASADSAHU