‘இடைத்தேர்தல் முடிவுகள்’.. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி..! தமிழகத்தில் நிலவரம் என்ன..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 24, 2019 12:00 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

TamilNadu Nanguneri, Vikravandi bypoll results 2019

புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிர்ஸ் கட்சியின் சார்பாக ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ்-அதிமுக கூட்டணி சார்பில் புவனேஷ்வரனும் போட்டியிட்டனர். அதேபோல் தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் நாங்குநேரியில் அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிட்டனர். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் 11-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 58,777 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகிறார். 33,656 வாக்குகளுடன் திமுக வேட்பாளர் புகழேந்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.  நாங்குநேரியில் 4-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 19,473 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 12,331 வாக்குகள் பெற்றுள்ளார்.

Tags : #AIADMK #DMK #ELECTIONS #ELECTIONRESULTS2019 #NANGUNERI #VIKRAVANDI #BYPOLL #TAMILNADU #BYELECTIONS2019