'முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை'.. அடுத்த 26 ம் நாள் இரட்டை குழந்தை.. சாத்தியமானது எப்படி? அதிர்ந்து போன மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 28, 2019 04:35 PM

முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை பெற்ற பெண்ணுக்கு அடுத்த 26 நாள்கள் கழித்து இரட்டைக் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bangladeshi woman gives birth to twins one month after first baby

வங்காளதேசத்தில் ஜெசோர் என்கிற பகுதியில் உள்ள ஷர்ஷா என்னும் கிராமத்தில் அரிபா சுல்தானா இதி என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனை அடுத்து கடந்த மாதம் பிரசவத்திற்காக அரிபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அழகான ஒரு  ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது அரிபாவின் வயிற்றில் இரு கருக்கள் கருக்கள் இருந்ததை மருத்துவர்கள் அறிந்திருக்கவில்லை. இதனை அரிபாவும் உணரவில்லை.

இந்நிலையில் சில நாள்களுக்கு பிறகு அரிபாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 26 நாள்களுக்கு பின் நடந்த 2 -வது பிரசவத்தில் அரிபாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை பார்ப்பது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #WOMAN #PREGNANT #BABIES #BIZARRE