ரயில்வே நடைமேடை மேம்பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து.. 5 பேர் பலி.. 35க்கும் மேல் படுகாயம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Mar 14, 2019 10:47 PM
ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததால் மும்பையில் நிகழ்ந்துள்ள பெரும் விபத்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்பதற்கேற்ப வெவ்வேறு இடங்களில் நடை மேம்பாலங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது ரயில் நிற்கும் நடைமேடைகள் எதுவெனத் தெரிந்துவிட்டால், அவற்றிற்குச் செல்ல வேண்டும் என மேம்பால வசதிகள் பயன்படுத்தப்படுவதுண்டு.
பலர் ரயில் தண்டவாளங்களில் இறங்கி ரயிலின் ஒரு நடைமேடையில் இருந்து இன்னொரு நடைமேடைக்குச் செல்ல முற்பட்டதால் பல வகையிலும் விபத்துக்கள் ஏற்பட்டன. இவற்றைத் தவிர்க்கும்பொருட்டுதான், ரயில்வே நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
இந்நிலையில் அப்படி, மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றுவருவதொடு, விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.