காதல் கை கூடல... விபரீத முடிவை எடுக்க நினைத்த இளம்பெண்.. அப்படியே தலைகீழான சம்பவம்!!.. பரபர பின்னணி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி, மாவட்டம் மணப்பாளையம் அருகே உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மகளான ரஞ்சினி, கல்லூரியில் படித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் தான், ரஞ்சினியும் அதே பகுதியில் வசிக்கும் செம்பருத்தி என்ற நபரும் சமீப காலமாக காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில், ரஞ்சினி மற்றும் செம்பருத்தி ஆகியோரின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தனது காதலுக்கு பெற்றோர்கள் ஆதரவு தெரிவிக்காததால், ரஞ்சினி விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. அதன் படி, மன உளைச்சலில் இருந்த அவர், விஷம் குடித்து விபரீத முடிவை எடுக்க முயன்றுள்ளார். மகளின் நிலையை கண்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அப்படி ஒரு சூழலில், அங்கிருந்து ரஞ்சினி திடீரென காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அவரை பெற்றோர்கள் தேடி வந்த நிலையில், உண்மைக் காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கு மத்தியில், ரஞ்சினி தனது காதலனான செம்பருத்தியை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திலும் சென்று தஞ்சம் அடைந்துள்ளது பற்றி தகவல் கிடைத்துள்ளது.
இதன் பின்னர், இரு தரப்பு பெற்றோரையும் அழைத்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து, பின்னர் காதலன் செம்பருத்தியுடன் ரஞ்சினியை அனுப்பி வைத்துள்ளனர். விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள இளம் பெண் ஒருவர் முடிவு எடுத்திருந்த நிலையில், அதன் பின்னர் போலீசார் உதவியுடன் காதலருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
Also Read | "அந்த ஹவுஸ்மேட் கிட்ட கோபப்படாத".. அம்மா சொன்ன விஷயம்.. அடுத்த நிமிஷமே கண் கலங்கி பதில் சொன்ன ரச்சிதா

மற்ற செய்திகள்
