"கால்பந்து ஃபீவர்ன்னா இதான் போலயே".. மெஸ்ஸி, எம்பாப்பே டீ ஷர்ட் அணிந்து தான் கல்யாணமே.. இணையத்தை கலக்கும் ஜோடி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 21, 2022 10:13 AM

சமீபத்தில் நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, அர்ஜென்டினா அணி 3 ஆவது முறையாக உலக கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.

Kerala Couple married with messi and mbappe jersey pic viral

Also Read | "இனி Delete For Me குடுத்தாலும் கவலை இல்ல".. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த செம வசதி..?

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள விளையாட்டு கால்பந்து. இதன் உலக கோப்பை தொடர், கடந்த நவம்பர் மாதம் கத்தாரில் வைத்து ஆரம்பமாகி இருந்தது. அந்த நாள் முதல், இறுதி போட்டி நடந்து முடிந்த தினம் வரை உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் பரபரப்பாக தான் இருந்தனர்.

இதற்கு மத்தியில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகளும் இறுதி போட்டியில் தகுதி பெற்றிருந்தன. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதி இருந்ததால், ஒட்டுமொத்த உலகமே இந்த இறுதி போட்டியை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. அதே போல, இந்தியாவின் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கூட பெரிய திரையில் இறுதி போட்டியை ஒளிபரப்பி கூட்டம் கூடியும் கண்டுகளித்தனர்.

Kerala Couple married with messi and mbappe jersey pic viral

அது மட்டுமில்லாமல், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும், கால்பந்து உலகின் ஜாம்பவானாகவும் கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, கால்பந்து உலகில் பல சாதனைகளை படைத்துள்ளார். ஆனால், உலக கோப்பையை வெல்வது மட்டும் எட்டாக்கனியாக இருந்து வந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடரில் அதிக கோல்களை மெஸ்ஸி அடித்திருந்த போதும் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்திருந்தது அவரை வேதனையில் ஆழ்த்தி இருந்தது.

இதன் பின்னர், தற்போது நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தததால் மெஸ்ஸிக்காக அந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் கால்பந்து பற்றி தெரியாதவர்கள் கூட அன்று இரவு பேசிக் கொண்டிருந்தனர். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி 4 - 2 என்ற கணக்கில் வென்றதுடன், 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையையும் கைப்பற்றி உள்ளது.

Kerala Couple married with messi and mbappe jersey pic viral

இந்த வெற்றியை அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதி செய்த விஷயமும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

கேரள மாநிலம், கொச்சி பகுதியை சேர்ந்த சச்சின் மற்றும் அதிரா ஜோடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து முடிந்தது. இதில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் தான் சச்சின். அதே போல, அதிராவும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் தீவிர ரசிகை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் திருமணத்தின் போது தங்களின் திருமண ஆடைகளின் மேல் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே ஜெர்சி அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடைபெற்ற டிசம்பர் 18 ஆம் தேதி தான் சச்சின் மற்றும் அதிரா ஆகியோர் திருமணம் நடைபெற்றது. அன்று இறுதி போட்டி என்பதால் மணமக்கள் கால்பந்து வீரர்களின் டீ-ஷர்ட் அணிந்து திருமண கோலத்தில் இருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில், கால்பந்து ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவரவும் செய்துள்ளது.

Also Read | அர்ஜென்டினா கப் ஜெயிச்ச இரவில்.. ஸ்தம்பிச்சு போன இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்.. வரலாறு படைத்த மெஸ்ஸியின் பதிவு!!

Tags : #KERALA #MARRIAGE #MESSI #COUPLE MARRIED #MBAPPE #MESSI AND MBAPPE JERSEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala Couple married with messi and mbappe jersey pic viral | India News.