"அட, இப்படியும் ஒரு திருமண பேனரா?".. 'பெண் அழைப்பு' முதல் 'முதலிரவு' வரை.. எல்லாத்தையும் டைமோட SCHEDULE போட்ட நண்பர்கள்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதையும் பார்த்திருப்போம்.

Also Read | "டிசம்பர் 18 மெஸ்ஸி கையில் கோப்பை இருக்கும்".. 7 வருடம் முன்பே கணித்த ரசிகர்..?? FIFA2022
ஒரு திருமணம் நடைபெறும் போது அதனை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அடுத்தவர்கள் கவனம் பெறும் அளவுக்கு யோசித்து யோசித்து செய்வார்கள்.
யாருமே செய்யாத வகையில் திருமண போட்டோ ஷூட் ஐடியாக்களை பயன்படுத்துவது, ரேஷன் கார்டு, விமான டிக்கெட், மருந்து அட்டை என திருமண அழைப்பிதழில் கூட புதுமை காட்டுவது என இப்படி திருமணத்தை சுற்றி வைரல் ஆகும் விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திருமண மேடையில் நண்பர்கள் கொடுக்கும் பரிசு, மணமக்களின் நடனம் உள்ளிட்ட விஷயங்கள் கூட பலரையும் வெகுவாக கவரும்.
அந்த வகையில், நண்பரின் திருமணத்திற்காக இளைஞர்கள் சேர்ந்து வைக்கும் வரவேற்பு பேனருக்கு முக்கிய பங்குண்டு. ஒரு காலத்தில் பாடல் வரிகளை பயன்படுத்தி, திருமண ஜோடிக்கு வாழ்த்து கூறி வந்த நண்பர்கள், இன்று வித விதமாக யோசித்து செய்தித் தாள் வடிவிலும், பல காமெடி வசனங்களுடன் கூடி திருமண பேனர் வைக்கின்றனர்.
அப்படி ஒரு பேனர் தான், தற்போது மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
நெல்லையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரது நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு மது ஒழிப்பு என்ற வாசகத்தை கையில் எடுத்து மிகவும் அசத்தலாக திருமண பேனர் ஒன்றை வைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் பள்ளமடை கிராமத்தில் காளி ராஜா மற்றும் பிரியா ஆகிய இருவருக்கு திருமணம் நடைபெற்றது. அப்படி ஒரு சூழலில் மாப்பிள்ளை காளி ராஜாவின் நண்பர்கள் 'மது ஒழிப்போர் சங்கம்' மற்றும் 'வெட்டி விஐபி சங்கம்' என்ற பெயரில் விளம்பர பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த பேனர்களில் இருந்த வாசகங்கள் தான் தற்போது இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து பலரது மத்தியில் பேசு பொருளாகவும் மாறி உள்ளது. 'குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்' என்ற வாசகத்தின் கீழ் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வசனத்தை பதிவிட்டு மணமக்கள் பெயரை அதில் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் 'நிகழ்ச்சி நிரல்' என்ற பெயரில் நேரம் வாரியாக திருமணத்தில் என்னென்ன நடைபெறும் என்பதையும் அதில் இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாலை 4:30 மணியளவில் 'பெண் அழைப்பு' தொடங்கி, நள்ளிரவு முதலிரவு வரை நடைபெறும் விஷயங்கள் அனைத்தையும் அவர்கள் இந்த பேனரில் குறிப்பிட்டு வைத்துள்ளனர்.
இதில் சிறப்பம்சமாக மாலை 6:00 மணிக்கு மாப்பிள்ளை தோழர்களில் அலப்பறை என காமெடி வசனம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் 7:30 மணி முதல் 9:30 மணி வரை சட்டி சோறு என விருந்தின் விவரத்தையும் குறிப்பிட்டுள்ளனர். இறுதியில் இரவு 10:30 மணிக்கு முதலிரவு, இரவு 11:30 மணிக்கு மின் கம்பியை அணில் துண்டித்தல் 12 மணிக்கு வான வேடிக்கை என குறும்புத்தனமாக இளைஞர்கள் அதில் குறிப்பிட்டுள்ள விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
