"கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்".. அதுக்கு அவங்க சொன்ன காரணம் தான்.. வைரல் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Dec 16, 2022 12:42 PM

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பகவான் விஷ்ணுவை திருமணம் செய்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Rajasthan woman marries Lord Vishnu her reason will surprise you

Also Read | காட்டுக்குள்ள நடந்துபோனப்போ பாறைக்கு இடையே சிக்கிய இளைஞர்.. 3 நாள் ஜூஸ் தான் சாப்பாடே... திக் திக் நிமிடங்கள்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நரசிங்புரா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா சிங். 30 வயதான இவர் அரசியல் அறிவியலில் முதுகலை படித்திருக்கிறார். இந்நிலையில், இவர் பகவான் விஷ்ணுவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். BSF-ல் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவரான இவரது தந்தை இந்த முடிவை எதிர்த்திருக்கிறார். ஆனாலும், பூஜா விடுவதாக இல்லை. இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி பகவான் விஷ்ணுவை இவர் திருமணம் செய்திருக்கிறார்.

Rajasthan woman marries Lord Vishnu her reason will surprise you

பூஜாவின் தந்தை இதற்கு மறுப்பு தெரிவித்துவந்த நிலையில் இந்த திருமணத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து அவருடைய தாய் ரத்தன் கன்வார் இந்த திருமணத்திற்கு முழு சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து உறவினர்கள் பலருக்கும் இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, கடந்த 8 ஆம் தேதி சுமார் 300 பேர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது.

Rajasthan woman marries Lord Vishnu her reason will surprise you

திருமணத்தின்போது, குருக்கள் பூஜைகளை மேற்கொள்ள விருந்தும் நடைபெற்றிருக்கிறது. இந்த திருமணம் குறித்து பேசியுள்ள பூஜா சிங்,"கணவன்-மனைவி இடையே அற்ப விஷயங்களில் தகராறு ஏற்படுவதை நான் பார்த்திருக்கிறேன். தகராறில் அவர்களின் வாழ்க்கை கெட்டுப் போகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதனால் தாக்குர்ஜியை (பகவான் விஷ்ணு) திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Rajasthan woman marries Lord Vishnu her reason will surprise you

வடமாநிலங்களில் பகவான் விஷ்ணுவை தாக்குர்ஜி என அழைப்பது வாடிக்கையாகும். தாக்குர்ஜி என்றால் மக்களை காக்கும் நபர் என அர்த்தமாம். அந்த வகையில் மக்களையும் உலகையும் காக்கும் விஷ்ணுவிற்கு இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த திருமணத்திற்காக குடும்பத்தாரிடம் சம்மதம் வாங்க கஷ்டப்பட்டதாகவும் தற்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் பூஜா சிங். இதனிடையே தனது வீட்டில் சிறிய கோவில் ஒன்றை அமைத்துள்ள பூஜா சிங் அதில் தினசரி பூஜைகளை நடத்த திட்டமிட்டிருக்கிறாராம். இந்நிலையில், இந்த திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

Also Read | போலீஸ் தேர்வுக்கு வந்த பெண்.. தலைக்குள் ரகசிய அறையா?.. போலீசையே அதிர வைத்த சம்பவம்!!..

Tags : #RAJASTHAN #WOMAN #MARRIES #LORD VISHNU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajasthan woman marries Lord Vishnu her reason will surprise you | India News.