ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து கூலித் தொழிலாளியின் மகளை பெண் கேட்ட இளைஞர்.. படுஜோராக நடந்த திருமணம்!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By K Sivasankar | Dec 25, 2022 11:42 AM

இந்தியாவில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த நபர் காதலித்து திருமணம் செய்து கொண்ட செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Australian man marries MP cycle repair mans daughter

பொதுவாக உன்னதமான காதல் என எடுத்துக் கொண்டால் அதற்கு வயதோ, மதமோ, மொழியோ, நாடோ என எந்த ஒரு விஷயமும் மிகப்பெரியதாக தோன்றாது. இவை அனைத்தையும் கடந்து உன்னதமான காதல் நிச்சயம் தடைகள் தாண்டியும் ஒன்றாக நிற்கும் என்று தான் பலரும் கூறுவார்கள். அந்த வகையில் ஒரு சம்பவம் தான் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிறு கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் தபஸ். இவரது தந்தை அந்த கிராமத்தில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை ஒன்றை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் அவரது வருமானத்தில் வாழ்ந்து வந்த இந்த குடும்பத்திலிருந்து சிறுவயதிலேயே நன்றாக படிக்கும் மாணவியாக திகழ்ந்து வந்தார் தபஸ். இதன் காரணமாக மத்திய பிரதேச மாநில அரசாங்கத்திடம் அவருக்கு உதவித்தொகை கிடைத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. மேலும் இந்த உதவித்தொகையை வைத்து அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரத்திற்கு உயர்கல்வி படிக்க சென்றதாகவும் தெரிகிறது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு அங்கு படிக்கச் சென்ற தபஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள தனது சீனியர் மாணவரான ஹான்சைல்ட் என்பவரை சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த சூழலில் அவர்கள் அதன்பின் காதலிக்க தொடங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றது. கடந்த ஆறு ஆண்டுகளாக தபஸ் மற்றும் ஹான்சைல்ட் ஆகியோர் காதலித்து வந்த சூழலில் கல்லூரி படிப்பை முடித்து நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆன பின் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

அதேபோல வேலை கிடைத்ததும் திருமணத்திற்கு பெண் கேட்பதற்காக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனது காதலில் சபஸ் வீட்டிற்கு முறையாக பெண் கேட்க வந்துள்ளார் ஹான்சைல்ட். அவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் மறுப்பது ஏதும் தெரிவிக்காமல் சம்மதம் கூற, மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் இந்த திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த கிராமத்திலேயே வைத்து இந்த திருமணம் நடைபெற்றதாகவும் அங்குள்ள மக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

இதுகுறித்து பேசிய ஹான்சைல்ட், இந்திய உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், குறிப்பாக ஜிலேபி தனது விருப்பத்திற்குரிய உணவு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற உணவுகளை விட இந்திய உணவை சாப்பிட முயற்சி செய்வதாகவும் அவர்கூறியுள்ளார்.  ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து இந்தியாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து கரம் பிடித்த வாலிபர் தொடர்பான செய்தி தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Tags : #AUSTRALIA #MARRIAGE #WEDDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Australian man marries MP cycle repair mans daughter | Inspiring News.