"நானா கொரோனாவான்னு ஒரு கை பாத்துடறேன்".. COUPLE GOAL ஐடியா.. VIRAL வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் அந்நாட்டை சேர்ந்த தம்பதி வித்தியாசமான முறையில் பாதுகாப்பு உடை அணிந்து தெருக்களில் சுற்றித் திரியும் வீடியோ உலக அளவில் வைரலாகி வருகிறது.
கொரோனா 2020 ஆம் ஆண்டு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாக சொல்லப்படும் இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகினர். இருப்பினும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்த பின்னர், உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. அதேவேளையில் உலகளவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக வேலை இழப்புகள், போக்குவரத்துக்கு தடை என உலகின் பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தன.
இந்நிலையில், கொரோனா வைரஸின் புதிய திரிபு ஒன்று மீண்டும் சீனாவில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் சுமார் 25 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் சீனா ஊரடங்கு உள்ளிட்ட எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. அதே வேளையில் உலக நாடுகள் பலவும் மீண்டும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சீனாவை சேர்ந்த தம்பதியர் ஒருவர் விசித்திரமான பாதுகாப்பு உடையுடன் சாலைகளில் நடமாடும் வீடியோ ஒன்று வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த வீடியோவில் பிளாஸ்டிக் கவர் ஒன்றை குடையாக மாற்றி அதற்குள் மாஸ்க் அணிந்தபடி அங்குமிங்கும் சென்று வருகின்றனர் இந்த தம்பதியர். சாலைகளில் நடந்து செல்லும் இவர்கள் சாலையோர கடைகளில் பொருட்களையும் வாங்குகின்றனர்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருவதுடன்,"இது ப்ரோ லெவல் ஐடியா" என்றும் "கப்பிள் கோல் என்றால் இதுதான்" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இதுவரையில் இந்த வீடியோ லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த தம்பதியின் வித்தியாசமான முயற்சியை நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர்.
A Chinese couple takes self-protection to another level... pic.twitter.com/ovPlIaAeZg
— People's Daily, China (@PDChina) December 22, 2022