வெளிநாட்டில்.. காருக்குள் இருந்த இந்திய இளைஞர் உடல்??.. போனில் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்!!
முகப்பு > செய்திகள் > உலகம்பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்கரன் ஜோசன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கனடா நாட்டின் கேல்கரி என்னும் பகுதியில் வசித்து பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

அப்படி ஒரு சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போயுள்ளார் ஜஸ்கரன். இது தொடர்பாக கனடாவில் உள்ள அவரது நண்பர்கள் சில இடங்களில் தேடியும் வந்த சூழலில் இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், கடும் அதிர்ச்சி சம்பவம் ஒன்றும் அரங்கேறி உள்ளது. கனடாவின் ஒரு பகுதியில் தனது சொந்த காரிலேயே உயிரிழந்த நிலையில் ஜஸ்கரன் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மகனின் நிலை குறித்த தகவலை இந்தியாவில் உள்ள அவரது தந்தை ஜஸ்வந்த்துக்கு கனேடிய போலீசார் தெரிவித்துள்ளனர். மகன் ஜஸ்கரன் மரணம் குறித்து பேசும் அவரது தந்தை, நான்கு வருடங்களாக கனடாவில் மகன் வேலை செய்து வருவதாகவும், கடந்த சில நாட்கள் முன்பாக அவரை காணவில்லை என்றும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது நண்பர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஜஸ்கரனை தேடி வந்த போது தான், அவரது மொபைல் நம்பரின் சிக்னல் கொண்டு கனேடிய போலீசார் காருக்குள் அவர் சடலமாக இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். ஜஸ்கரனின் சகோதரி அமெரிக்காவில் உள்ள நிலையில், அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்கரனின் முடிவு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், காருக்குள் இந்தியர் இளைஞர் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் கடும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக நடந்த முதல்கட்ட விசாரணையில், ஜஸ்கரன் கொஞ்சம் பணத்தினை சிலரிடம் கொடுத்து ஏமாந்ததால் வருத்தத்தில் இருந்ததாகவும், அவரை குடும்பத்தினர் தேற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக போலீசாரும் தீவிர விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

மற்ற செய்திகள்
